திரு. குணரத்தினம் கார்த்திகேசு
(Retired Asst Director of Agriculture , North - East Province, National Consultant UN / FAO - Sri Lanka)
தோற்றம்: 22 மே 1933 - மறைவு: 01 ஆகஸ்ட் 2021
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கார்த்திகேசு அவர்கள் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கருணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேகா, சுரேந்திரா, பாலேந்திரா, சத்தியேந்திரா, கஜேந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகுமார், நிக்கி, ஹேமலதா, ஹொங், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, ஞானேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கமலேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கம், லீலாநந்தேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ரெட்ணேஸ்வரி, காலஞ்சென்ற தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலனும்,
Dr சரணியா, ஷோபியா, சரண், ரூபேஷ், ஆதேஷ், சொபியா, ரயன், சனந்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.
www.tamilthakaval.org
