Mr. Kunaratnasingam Sivanandasingam

(Soil Research Officer - Irrigation Department)

Kunaratnasingam Sivanandasingam

Date of Birth: 16 August 1952 - Deceased: 17 October 2024

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுருவில், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரெத்தினசிங்கம் சிவானந்தசிங்கம் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற வைத்தியர் குணரெத்தினசிங்கம் (JP)-செல்லம்மா தம்பதியினரின் ஏகபுத்திரனும்,

சுருவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற சிவகுரு-தேவஞானி (தெய்வானை) தம்பதியினரின் ஆசை மருமகனும்,

ஜெயநிதி அவர்களின் ஆருயிர் கணவரும்,

சஜீவன், Dr.அகன்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுஜந்தன், நிலுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Destin, Ameera ஆகியோரின் பாசமிகு தாத்தவும்,

விஜயலெட்சுமி (ஒய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர் ஆதார வைத்தியசாலை, சாவகச்சேரி) அவர்களின் அருமைச் சகோதரரும்,

முருகையா, காலஞ்சென்ற கலாநிதி குலசிங்கம் மற்றும் சிவகுமார் இந்திராவதி, குமார் மகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மனோகரன் திருச்செல்வம் ஆகியோரின் பெறாமகனும்,

அபிராமி, அஜந்தன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,

சதீஸ்குமார், றஜிதரா (சசி), லதாயினி பரமதாசன், கஜனி ரமேஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நிரோஷன், லக்ஸ்சனா, லாவண்யா, தாரண்யா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.30-9.00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-10-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2024 04:00)