திரு. குப்புசாமி ராஜசுந்தரம்

குப்புசாமி ராஜசுந்தரம்

மறைவு: 05 மே 2024

கொழும்​பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குப்புசாமி ராஜசுந்தரம் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குப்புசாமி - நாகம்மா தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும், 

பிரேமகாந்தா (முன்னாள் வௌிவிவகார அமைச்சு- இலங்கை தூதரகம் ஜகார்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், விஜயலட்சுமி மற்றும் இராஜலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் புஞ்சி பொரளை லங்கா மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-05-2024 புதன்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/05/2024 04:00)