திருமதி. குசேலா மகேந்திரன்

குசேலா மகேந்திரன்

தோற்றம்: 11 ஆகஸ்ட் 1946 - மறைவு: 05 மார்ச் 2026

யாழ். வட்டுக்கோட்டை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குசேலா மகேந்திரன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - சுருதி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முருகப்பர் ஆறுமுகம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான லலிதாம்பாள், கிருபாலசிங்கா மற்றும் ஜீவசிங்கா, நேசராணி, சந்திரசிங்கா, யுகசொரூபி, நோபாலசிங்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திவாகரன் (பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ரஜனி (பொது வைத்திய நிபுணர் - யாழ். போதனா வைத்தியசாலை), வைத்திய கலாநிதி சுதர்சனா (அவுஸ்திரேலியா), கிரிஜா (துறைத் தலைவர் - சிரேஷ்ட விரிவுரையாளர், பயிரியல் துறை, விவசாய பீடம், யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

ஜோதிகா (பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ஶ்ரீகிருஷ்ணா (என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர், யாழ் போதனா வைத்தியசாலை), ஆருரன் (கணக்காளர், அவுஸ்திரேலியா), நிசாந்தன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அஸ்வினி, அருணன், ஶ்ரீவாசினி, ஶ்ரீவைஷ்ணவி, அருக்‌ஷன், அஜந்தன், ஆர்த்திகன், அக்‌ஷயா, ஆதித்தியன், பிரதீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/03/2026 00:00)