Mrs. Kusela Mahendran
Date of Birth: 11 August 1946 - Deceased: 05 March 2026
யாழ். வட்டுக்கோட்டை கிழக்கைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குசேலா மகேந்திரன் அவர்கள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - சுருதி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முருகப்பர் ஆறுமுகம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லலிதாம்பாள், கிருபாலசிங்கா மற்றும் ஜீவசிங்கா, நேசராணி, சந்திரசிங்கா, யுகசொரூபி, நோபாலசிங்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திவாகரன் (பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ரஜனி (பொது வைத்திய நிபுணர் - யாழ். போதனா வைத்தியசாலை), வைத்திய கலாநிதி சுதர்சனா (அவுஸ்திரேலியா), கிரிஜா (துறைத் தலைவர் - சிரேஷ்ட விரிவுரையாளர், பயிரியல் துறை, விவசாய பீடம், யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ஜோதிகா (பொறியியலாளர் - ஐக்கிய அமெரிக்கா), வைத்திய கலாநிதி ஶ்ரீகிருஷ்ணா (என்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர், யாழ் போதனா வைத்தியசாலை), ஆருரன் (கணக்காளர், அவுஸ்திரேலியா), நிசாந்தன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியும்,
அஸ்வினி, அருணன், ஶ்ரீவாசினி, ஶ்ரீவைஷ்ணவி, அருக்ஷன், அஜந்தன், ஆர்த்திகன், அக்ஷயா, ஆதித்தியன், பிரதீசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
