திரு. குத்தாலிங்கம் இராமசந்திரன் செட்டியார்
(ஶ்ரீ சிங்கமஹா காளி தேவஸ்தான தலைவர்-நீர்கொழும்பு)
தோற்றம்: 22 ஏப்ரல் 1942 - மறைவு: 17 ஆகஸ்ட் 2024
நீர்கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குத்தாலிங்கம் இராமசந்திரன் செட்டியார் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குத்தாலிங்கம் செட்டியார்-தருமாவதி அம்மாள் தம்பதியினரின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற முத்தையா செட்டியார்-சுப்பம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
வடிகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் மைத்துனரும்,
ஜெயராணி, உமா மகேஸ்வரி, ஶ்ரீ சங்கரலிங்கம், மைதிலி, காலஞ்சென்ற சுகாதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகம், ஶ்ரீதர், ஜெகன்மோகன் ஆகியோரின் மரியாதைக்குரிய மாமனாரும் ஆவார்
அன்னாரின் புகழுடல் 21-08-2024 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
331/24A, சரப்பவத்த, வெலிஹன,
கொச்சிக்கடை, நீர்கொழும்பு.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
