Mrs. Lakshmi Pillai Ganapathipillai
Date of Birth: 22 October 1930 - Deceased: 10 June 2026
யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இலட்சுமிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 10-06-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பர் - கதிரேசப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (தபால் அதிபர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா (பொன்னு), கிருஷ்ணபிள்ளை, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, கமலாதேவி மற்றும் இராசமணி காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சுப்பிரமணியம், பரமேஸ்வரி, இராசம்மா, ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனலக்குமி, ரவீந்திரன் (அவுஸ்திரேலியா), சிவகுமாரன் (பிரித்தானியா), பஞ்சலிங்கம் (Botswana), ராமகிருஷ்ணன் (ஐக்கிய அமெரிக்கா), விஜயலக்ஷ்மி (பிரித்தானியா), கந்தரூபன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாகும்,
காலஞ்சென்ற சந்திரநாயகம், தேவிகா, சாந்தி, மலைமகள், விஜயராணி, காலஞ்சென்ற மாணிக்கதேவன், அகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபாங்கினி, காலஞ்சென்ற உமா, பிரவீணா, பிரதீபா, அபர்ணா, தரணிதரன், கயாந்தினி, அபிராமி, கேசவன், நிதர்சினி, பிரகாஷ், பிரஷாந்தினி, அஞ்சலி, ராகவி மிதிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மதுரிதன், சிவஹரிஷ், அரன், சீரோன், அகான், ஆவ்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை லோட்டஸ் மண்டபத்தில் (Jayaratne Funeral Parlour Lotus Hall, Borella) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 17-06-2026 புதன்கிழமை அன்று முற்பகல் 10:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 11 250 8807
www.tamilthakaval.org
