திருமதி. இலட்சுமணன் மரகதமாணிக்கம்
தோற்றம்: 23 மார்ச் 1942 - மறைவு: 06 ஆகஸ்ட் 2026
திருகோணமலை - ஈச்சிலம்பற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. இலட்சுமணன் மரகதமாணிக்கம் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாயபிள்ளை - தங்கப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், மூத்ததம்பி - தையமுத்து தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இலட்சுமணன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், காளிப்பிள்ளை, தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சறோசாதேவி, சுந்தரலிங்கம், மகாலிங்கம், அமிர்தலிங்கம், சுபத்திராதேவி, நாகலிங்கம், பரிமளாதேவி, பரமசிவலிங்கம், பங்கையதேவி புண்ணியலிங்கம், முத்துலிங்கம், குந்தம்மாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஸ்ணபிள்ளை, ஜானகியம்மா, இரத்தினசுமதி, சந்திரவதனி, ஆனந்தி, யோகராசா, ஜெயவதனி, ரவிச்சந்திரன், கஜேந்தினி, மஞ்சுளாதேவி, கிருபைலிங்கம் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-08-2026 வௌ்ளிக்கிழமை அன்று நடைபெற்று, பிற்பகல் 2.30 மணியளவில் திருவுடல் ஈச்சிலம்பற்று இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
