Mrs. Latchumy Francisca Kanapathippillai

Latchumy Francisca Kanapathippillai

Date of Birth: 05 February 1928 - Deceased: 10 April 2026

 "உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்

(யோவான் 11: 25)

மட்டக்களப்பு - பெரியகல்லாற்றை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லெட்சுமி பிரான்சிஸ்கா கணபதிப்பிள்ளை அவர்கள் 10-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கேதாரம் பெனடிற் - வெள்ளச்சி அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற காளிக்குட்டி - மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பூபதி, நாகமுத்து. அமரசிங்கம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இருதயராணி (ஓய்வு பெற்ற குடும்பநல உத்தியோகத்தர்), ஞானமலர், தவமலர் (அருட்சகோதரி, பிரான்சிஸ்கன் சபை). ஆனந்தலீலா மெற்றில்டா (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நடராசா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), நோபட் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), இந்திரஜித் ஸ்ரீபன் (ஓய்வுபெற்ற வங்கிப் பாதுகாப்பு உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

முருகுப்பிள்ளையின் மைத்துனியும்,

தேவராசா, வியாகுலமேரி, அமராவதி, பார்வதி, திருப்பதி, காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் சிறிய தாயும்,

பாக்கியராணி, தவராணி, வடிவேல், தங்கராசா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ஷர்மிளாதேவி (காணிப்பயன்பாட்டு உத்தியோகத்தர்), தர்மிதா (இலண்டன்), கவிதரன், நொயலா (தாதிய உத்தியோகத்தர்), றொணி ஜெபர்சன் (மருத்துவப் பிரதிநிதி), இவோன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கார்த்தீபன் (ஆசிரியர்), கோகுலராஜ் (இலண்டன்), தனுஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர்), ஜோன் அல்கம் பாத்லட் (பிரான்ஸ்) ஆகியோரின் அப்பம்மாவும்,

டிருப்ஷா, கரிஷ்னா, தீட்ஷயன், ஜிபர்ணா, பிரக்ஷயன், ரியா, ரியோஷயன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் சரீரம் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலயத்தில் நடைபெறும் இறுதி ஆராதனையைத் தொடர்ந்து பெரியகல்லாறு உறவுகள் உறங்கும் இல்லத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2026 00:00)