திருமதி. லெட்சுமிதேவி குலேந்திரன்

லெட்சுமிதேவி குலேந்திரன்

தோற்றம்: 12 ஜனவரி 1942 - மறைவு: 25 மார்ச் 2026

யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நியூசிலாந்து, அவுஸ்திரேலி ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி. லெட்சுமிதேவி குலேந்திரன் அவர்கள் 25-03-2026 புதன்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுந்தரம் - செல்வரெத்தினம் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் - சுந்தரம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் குலேந்திரன் அவர்களின் மனைவியும்,

ஆறுமுகப்பெருமான் - தெய்வநாயகி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

சுந்தரேஸ்வரி (சுமதி) இன் பாசமிகு தாயும்,

இராஜசேகரம் (தம்பிக்குட்டி) இன் அன்புக்குரிய மாமியாரும்,

பொன்னுச்சாமி, குணசீலன், சரோஜினிதேவி, சத்தியசீலன், சுந்தராம்பாள், காலஞ்சென்ற நாகம்மாள் ஆகியோரின் சகோதரியும்,

சண்முகாதேவி, கமலாதேவி, இராமசாமி, காலஞ்சென்ற ஈஸ்வரதேவன், லீலாவதி, சிவகாடாட்சம் ஆகியோரின் மைத்துனியும்,

தவமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற மகேந்திரன், ராஜேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

சத்துருசங்காரவேல், சுசீலாதேவி, செல்வச்சந்திரன், காலஞ்சென்ற சக்திவேல் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் - செல்வநாயகி ஆகியோரின் சம்பந்தியும்,

தினேஷ், ஷியாமலா, மயூரன், துவராகா, கிருஷ்ணன், மெதுஷா ஆகியோரின் பேத்தியும்,

யாதேவ், லட்சுமி, ராதா, ஈஸ்வர் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி மரியாதையும் கிரியையும் 30-03-2026 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 - 1.00 மணி வரை 4 Milford Grove, Cherrybrook, Australia இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 - 2.45 மணி வரை திருவுடல் North Chappel, Pinegrove Memorial Park, Minchinbury இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2026 00:00)