திருமதி. லீலாவதி நடராஜா (தவம்)

லீலாவதி நடராஜா (தவம்)

தோற்றம்: 01 அக்டோபர் 1930 - மறைவு: 20 நவம்பர் 2026

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வடலியடைப்பு, தலையாழி கொக்குவில் ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும், கனடாவின் - Pickering நகரை இறுதி வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி. லீலாவதி நடராஜா அவர்கள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா -சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், சுப்பையா - செல்லத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விஜயசிங்கம், தர்மசிங்கம், யோகசிங்கம், காந்திமதி (பேபி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

புஷ்பா, ராஜன், பேபி, பிரேமா, ஜோதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலச்சந்திரன், சந்திரவதனா, நிம்மி, ஜெயசிங்கம், ரவிகுலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜீவ், மகில்ராஜ், சபி, ஜோதி, நிக்ஷன், நிக்கோலா, நிரோஷன், மாதுளன், மதன், மிதுசாரா, அபி, வதனன், லக்ஷிகா, கோகுல், ராகவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மியா, அடம், ரோஸ், அலியா, இனயா, கியாரா, எமா, லூக்கஸ், அபிநாஷ், அபிநயா, யுனெஸ், கலிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 25-11-2026 புதன்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரவி (மருமகன்):- +1 416 727 4834
அபி (பேரன்):- +1 647 894 3345
பாலா (மருமகன்):- +1 416 826 8386

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/11/2026 00:00)