திருமதி. லெட்சுமண்பிள்ளை சரோஜா
தோற்றம்: 10 மார்ச் 1957 - மறைவு: 08 மார்ச் 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் அபினிமங்கலம் கிராமம் (களப்பாளன் கோத்திரம்) நாவலப்பிட்டியைச் சேர்ந்த திருமதி. லெட்சுமண்பிள்ளை (சோமசுந்தரம்) சரோஜா அவர்கள் 08-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியண்ணன்பிள்ளை (SMM & CO - தெல்தொட்ட) - மூக்காயி அம்மாள் தம்பதியினரின் மகளும், காலஞ்சென்றவர்களான தைலான்பிள்ளை - அரவாத்தம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற லெட்சுமண்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
நிஷாந்தன் (ஶ்ரீ சுந்தரம்ஸ், நாவலப்பிட்டி), மோகனதாஸ் (மோகன்), ஹேமப்ரியா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
கனுஷா, சதீஸ்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமியாரும்,
நாகம்மா, பாலசுப்ரமணியம், காலஞ்சென்ற விஜயலெட்சுமி, அரவாம்பாள், யோகநாதன், காலஞ்சென்றவர்களான தேன்மொழி, ரவிச்சந்திரன் மற்றும் விமலா ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற சந்திரன் - கஸ்தூரி (கொழும்பு), மோகனதாஸ் - ராஜேஸ்வரி (குருதெனிய) ஆகியோரின் சம்பந்தியும்,
அஹிஷ்னு, அனிக்ஸா, நிவிக்ஸன் ஆகியோரின் அப்பாயியும்,
ரக்ஸன், கவின், தவ்யன் ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-3/1, பெனிதுடுமுல்ல இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 11-03-2026 புதன்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
