Mrs. Lilly Thangarathnam Singharajah

Lilly Thangarathnam Singharajah

Date of Birth: 11 June 1942 - Deceased: 24 April 2026

யாழ். சுண்டுக்குளி இல-4, கோவில் வீதி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லில்லி தங்கரத்தினம் சிங்கராஜா அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சூசைப்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிங்கராஜா அவர்களின் மனைவியும்,

றொமேஷ் (உப அதிபர்-யாழ். மத்திய கல்லூரி) அவர்களின் தாயாரும்,

ஆன்மொனிக்கா றொமேஷ் (ஆசிரியை - யாழ். சென் சாள்ஸ் மகாவித்தியாலயம்) அவர்களின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விக்ரர் ஞானம்மா, மேரி லில்லி மரியநாயகம் மற்றும் பிரான்சிஸ் சேவியர், காலஞ்சென்ற புஷ்பம் நவரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஐலின், ஜெனோஷன் அவர்களின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச்சடங்கு 25-04-2026 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித யுவானியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் புனித கொஞ்சேஞ்சிமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

தொடர்புகளுக்கு:

+94 77 400 5953
+94 77 271 9982

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/04/2026 00:00)