திரு. லயன் குமாரலிங்கம் ஸ்ரீதர் (உசன்)

(டென்சி போட்டோ - இணுவில், வெள்ளவத்தை)

லயன் குமாரலிங்கம் ஸ்ரீதர் (உசன்)

தோற்றம்: 22 ஜனவரி 1961 - மறைவு: 15 பெப்ரவரி 2026

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், செட்டிவளவு வீதி, இணுவில் மேற்கு மற்றும் கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குமாரலிங்கம் ஸ்ரீதர் அவர்கள் 15-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இணுவிலில். இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - பத்தினிப்பிள்ளை, கந்தையா - அன்னம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற குமாரலிங்கம் - கணேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற இரத்தினம் - சமாதானதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மஞ்சரிதேவி அவர்களின் ஆருயிர் கணவரும்,

காலஞ்சென்ற யதீசாவின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்ற கிரிஜா, அனுஷா, வனஜா (ஜேர்மனி), கீதா, குருபரன் (பிரான்ஸ்), பதீதரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சண்முகவடிவேல், ஸ்ரீதரன், ரகுநாதன், துஜானந்தி, இரவீந்திரநாதன், மகேந்திரநாதன், யோகமாலினி ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பையா, இராசதுரை, குலதுங்கம், திருநாவுக்கரசு மற்றும் தவமலர், சுந்தரராணி, சிவமலர் ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - பொன்னமா ஆகியோரின் மருமகனும்,

ஸ்ரீகல்யாணி - லக்ஸ்மன், சேயோன், சசிவதனன், தமஸ்வினி, கோசிகா - சர்வக்ஞன், தனுசிகா - தனகோபி, சரண்யா, சரண், ஆதவன், ஆர்த்திகன், கஜேந்தினி, டிலக்சன், சிவனேஸ், சைலேஸ் ஆகியோரின் மாமனாரும்,

வல்லபை, தமிழ்க்கனி, அறிவழகன், ஆரபி, ராகுல், அஸ்வின் ஆகியோரின் பெரிய தந்தையும்,

ஆதிரன், மித்திரன், ஆருத்திரன், சுருதிக்ஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-02-2026 திங்கட்கிழமை அன்று மதியம் 1:00 மணியளவில் இணுவிலில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2026 00:00)