திரு. லயன் வல்லிபுரம் பரமசிவம்(ஜே.பி)

லயன் வல்லிபுரம் பரமசிவம்(ஜே.பி)

தோற்றம்: 22 மார்ச் 1930 - மறைவு: 16 மே 2021

யாழ்ப்பாணம் நல்லூர் செல்லர் வீதியைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திரு லயன் வல்லிபுரம் பரமசிவம் (ஜே.பி) அவர்கள் கடந்த 16-05-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பங்கயவல்லி தம்பதிகளின் மகனும்,

காலஞ்சென்றவர்களான சரவணமுத்து இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற லயன் சீமாட்டி சரஸ்வதியின் பாசமிகு கணவரும்,

Dr சிவகுமார்(லண்டன்), சிவமலர் கேசவன், சிவயோகன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு, இராசையா, மயில்வாகனம்  ஆகியோரின் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான  Dr. செல்வரட்ணம், Dr. சபாரட்ணம், செல்லம்மா, பராசக்தி, சுந்தரலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,

Dr. சாந்தினி சிவகுமார் (லண்டன்),  திரு கனகரட்ணம் கேசவன் (சட்டத்தரணி),  சிவநாயகி சிவயோகன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

Dr பார்த்தீபன்(லண்டன்)- கேஷினி(லண்டன்), Dr ஆர்த்தி(லண்டன்)- ஹரிதோஸ்(லண்டன்), Dr. மயூரதன் (அமெரிக்கா,PA ,USA)-Dr. இந்துஷி (அமெரிக்கா PA, USA), Dr. சஜீவன் (அவுஸ்ரேலியா)- Dr. பிரபாஷினி (அவுஸ்ரேலியா), மேனகா (சட்டத்தரணி)-ஜீவதர்ஷன் (முகாமையாளர் VFS Global), துளசிகா (சட்டத்தரணி)-சரவணன் (சட்டத்தரணி), மதுசன் (லண்டன்)   ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அதித்தி மயூரதன் (அமெரிக்கா PA ,USA), ராகவ் மயூரதன் (அமெரிக்கா PA,USA), அய்ஷான் பார்த்தீபன் (லண்டன்), பைரவி சரவணன் (கொழும்பு), மானுஷி ஜீவதர்ஷன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று 18-005-2021ம் திகதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனக் கிரிகைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:- கனகரட்ணம் கேசவன்(சட்டத்தரணி), மற்றும் குடும்பத்தினர்
 
0212223856
 
விலாசம்:-
 
128,செல்லர் வீதி,
நல்லூர்,யாழ்ப்பாணம்
 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/05/2021 13:22)