Mrs. Liyano Evangeline Puwanesvary Amirthanayagam

Liyano Evangeline Puwanesvary Amirthanayagam

Date of Birth: 11 December 1951 - Deceased: 25 April 2026

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு (இலங்கை), Ilford and Mundesley (பிரித்தானியா) ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லியோனோ எவாஞ்சலின் புவனேஸ்வரி அமிர்தநாயகம் அவர்கள் 25- 04-2026 சனிக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை - சிசீலியா (கரம்பொன் குறக்காடு/கல் ஒழுங்கை/பாலாவி வீதி) தம்பதியினரின் செல்வப் புத்திரியும்,

காலஞ்சென்ற (காவத்தை) முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை - அன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை யோன் அமிர்தநாயகம் (துரை/ கிளிநொச்சி லக்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

லெனிற் யூலியா றொபின்சன் (அவுஸ்ரேலியா), லியோனாட் யூலியன் (பிரித்தானியா), அன்ரனிற் சுனித்திரா (பிரித்தானியா), திலகன் றெமிஜியஸ் (பிரித்தானியா) ஆகியோரின் வாஞ்ஞை மிகு அன்னையும்,

நொயல் றொபின்சன் (அவுஸ்திரேலியா), கிறிஸ்ரின் தயாளினி (பிரித்தானியா), அன்ரன் டெனிஸ் திருச்செல்வம் (பிரித்தானியா), ஆன் தர்ஷினி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான யோசப் (மகேந்திரன்), யேசுதாசன் பாலா மற்றும் றென்ரன் சுரேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு ஒற்றைச் சகோதரியும்,

நொயலின், பத்மினி (கிளி), குளோடியா (சாந்தி), பிலோமினா, அனெற், ஸ்ரெலா, இந்திரா, காலஞ்சென்றவர்களான பொனிபஸ் (மாமா)- திரேசம்மா, அல்பிரட்-வயலற், ஸ்ரனிஸ்லொஸ், Rev Sr அன்ரனிற்ரா, அந்தோனிப்பிள்ளை, சேவியர் (தாசன்) கில்பேட் (கிளி)ஆகியோரின் சொந்தம் காத்து வாழ்ந்த மைத்துனியும்,

கெவின், ஸ்ரிவன், அன்றியன், அஸ்லின், பே(fa)பியன், பெ(fe)லிஷியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இறுதிச்சடங்கு விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/05/2026 00:00)