திருமதி லோகநாயகி தங்கவடிவேல்

லோகநாயகி தங்கவடிவேல்

தோற்றம்: 19 ஜனவரி 1959 - மறைவு: 03 மே 2025

யாழ். எழுதுமட்டுவாழ் வடக்கு மருதங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொயிலாமனை கொடிகாமத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகநாயகி தங்கவடிவேல் அவர்கள் 03-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

தங்கவடிவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நாகேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சோபிகா, சிவதாஸ் (பொறியியலாளர் - இலண்டன், பழைய மாணவன் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மொறட்டுவப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மணிவண்ணன் (ஆசிரியர் - மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

அபிராமின் பாசமிகு பேத்தியும்,

சயூத்பவானின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-05-2025 திங்கட்கிழமை காலை 8:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கட்டை பறிச்சான் இந்து மயானத்தில் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/05/2025 19:46)