திருமதி. லோகேஸ்வரி சின்னத்துரை
தோற்றம்: 30 ஏப்ரல் 1938 - மறைவு: 08 ஜூன் 2025
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரி சின்னத்துரை அவர்கள் 08-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை - நீலமணி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - தில்லைமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திலகவதி வாமதேவன், சரோஜினிதேவி பரஞ்சோதி, விஜலட்சுமி நவரத்தினம், காலஞ்சென்ற கெங்காதரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரமணன் (கனடா), ரமணி (பிரான்ஸ்), ரஜினி (கனடா), காலஞ்சென்ற ரஜனன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வனஜா, சத்தியநாதன், மதிவர்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்ஷரா, ரவணியா, விஷால், பூஜாங்கிதா, சஜானா, மஞ்சுரா, தாரேஸ், தக்ஷேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-06-2025 புதன்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரை Chapel Ridge Funeral Home (8911 Woodbine Avenue, Markham, Ontario) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 12-06-2025 வியாழக்கிழமை காலை 7:30 மணி முதல் பார்வையும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium Inc. (2 Stalwart Industrial Drive Gormley, ON L0H 1G0) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
