திருமதி லோகேஸ்வரன் புஸ்பராணி

லோகேஸ்வரன் புஸ்பராணி

தோற்றம்: 03 பெப்ரவரி 1964 - மறைவு: 18 பெப்ரவரி 2024

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லோகேஸ்வரன் புஸ்பராணி அவர்கள் 18-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

சின்னத்துரை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

டில்சன், டிஸ்சாந்தன், கீர்த்திகா, தர்சிகா, கார்த்திகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவரூபனி, தாட்ஷாயினி, புவிதரன், கஜரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கனகமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரன், கேதீஸ்வரன், சிவசம்பு, புவனேஸ்வரன், சுந்தரலிங்கம், நாகேஸ்வரி, இராசலட்சுமி, விஜயலட்சுமி, தனலட்சுமி, மகாலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுசிகன், லிந்துசன், ரக்சயன், லோஜிதா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிமுதல் 11.00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் தேவிபுரம் ஆ பகுதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:

ஆ பகுதி,

தேவிபுரம்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தரவு மூலம்:வயாவிளான் மக்கள் ஒன்றியம் - பிரான்ஸ்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2024 05:00)