Mr. Loheshwaranathan Shanmughanathan
(முன்னாள் லதா ராக்ஸ் - கொழும்பு உரிமையாளர்)
Date of Birth: 15 September 1946 - Deceased: 14 August 2026
யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், Oberhausen - ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. லோகேஸ்வரநாதன் சண்முகநாதன் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் - அமிர்தம்மா இணையரின் அன்பு மகனும், வேலணையைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் - ஞானாம்பிகை இணையரின் அன்பு மருமகனும்,
சித்ராதேவி அவர்களின் அன்புக்குரிய கணவரும்,
சுரேகா, சோபிகா, கோபிகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ஈஸ்வரி, சாரதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் ஆசைச் சகோதரனும்,
சகுந்தலா, காலஞ்சென்றவர்களான சிவநாதன், நளாயினி, சுவாமிநாதன் ஆகியோரின் அத்தாரும்,
Clara Nila, Philipp Narun, Mael Arun ஆகியோரின் அன்புப் பேரனும்,
Maththias, Marcel, Justine Dickhof ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவபாதம், பரநிருபசிங்கம், ஜெயகெளரி, பாலசுப்ரமணியம், பிரபாகரன் ஆகியாரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
