Mrs. Lourdes Pushparani Selvarajah
Date of Birth: 11 February 1945 - Deceased: 27 April 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. லூர்ட்ஸ் புஷ்பராணி செல்வராஜா அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் திரவியம் - மாரியம்மா பிலிப் தம்பதியினரின் ஆருயிர் மகளும், காலம்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை - மேரிப்பிள்ளை (செல்லம்மா) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராஜா (கிளிநொச்சி கச்சேரி சமூகசேவைப் பிரிவு பிரதம இலிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜசிந்தா சூசைதாஸ், பெனிட்டா பிலிப், அன்ரன் பிலிப் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இவோண் வரதராஜா (ஜேர்மனி), கிளட்ஸ்டன் (கனடா) விஜேந்திரா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிறிஸ்டி வரதராஜா, மாலினி மரிஸ்டெல்லா, நிலுபர் மும்தாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கொன்லின், கலிஸ்ரன், ஜென்சென், அன்ரூ, ஜோன், ஆரோன், நிவிஷான், வனேசா, திரேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செயின் சிரேயா, லிவி ஆகியோரின் பூட்டியும்
காலஞ்சென்றவர்களான அனஸ்ரெசியா, ஜசிந்தா மற்றும் ஐரீன், எல்மோ, அன்டன், சில்வெஸ்டர், ஜெராட், மேர்வின், ராஜ்குமார் ஆகியோரின் சித்தியும்,
அனிட், அமிலஸ், காலஞ்சென்ற கமலினி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
