திருமதி. லூசியா பாவிலுப்பிள்ளை
தோற்றம்: 29 பெப்ரவரி 1936 - மறைவு: 20 ஜூலை 2024
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், மாதகல், கனடா, நீர்கொழும்பு போன்ற இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லூசியா பாவிலுப்பிள்ளை அவர்கள் 20-07-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை-மேரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
மடுத்தீன்-வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மடுத்தீன் பாவிலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
அந்தோனிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான லூர்தம்மா, மேரி இசபெல் அவர்களின் அன்புச் சகோதரியும்,
மரியதிரேசா, காலஞ்சென்ற அந்தோனிமுத்து தோமஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டொறின் பியற்றீஸ் பபி (சுவிஸ்), பேளின் சுமதி (கனடா), காலஞ்சென்றவர்களான அகஸ்ரா றதி,றெஜினோல்ட், ஐறின் சாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஜோன்சன் (சுவிஸ்), கியூபேட் அருள்தாஸ் (கனடா), வசந்தி மாலா (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
எரிக்-கரோலின் (சுவிஸ்), கமிலா (சுவிஸ்), தொம்சன் (சுவிஸ்), அஜந்தன்-கன்டீஸ் (கனடா), அஜித்தா (கனடா), டியோன் டயஸ் (இலண்டன்), டானியேல் டினேஸ் (இலண்டன்), டிசாந்தன் (இலண்டன்), டினுசா (இலண்டன்), டிலக்சன் (இலங்கை), விதுசா (இலங்கை) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்.
மணிசாமியா, நெவின் லியோ, சீக் அன்ரனி, மானஷ் றெஜி, நேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும்.
அமிர்தநாதன், அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அவர்களின் சிறிய தாயும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 26-07-2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில், 19A/1, Thushara Mawatha, Negombo இலுள்ள இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 27-07-2024 சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதி ஆராதனைக்காக குடாப்பாடு புனித செபமாலை மாதா ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் நீர்கொழும்பு பொது சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
