Mr. M.Ganeshan
(கொழும்பு பேர்ள் டெக்ஸ்டைல் ஸ்தாபகர்)
Date of Birth: 02 May 1939 - Deceased: 30 August 2026
இந்தியா - திருச்சி மாவட்டம் தெற்கு சிறுப்பத்தூர் கிராமம், முருக்கத்துடையான் கோத்திரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்தையா பிள்ளை - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும், வடக்கு சிறுப்பத்தூர் டிக்கோயா காலஞ்சென்ற முத்துசாமிபிள்ளை - சின்னம்மாள் தம்பதியினரின் மருமகனும், கோமதி அவர்களின் அன்புக் கணவருமாகிய M.கணேஷன் அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுமதி, அரவிந்தன், ரவீந்திரகுமார், ஸ்ரீஹரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகராஜ், சசிகலா, அமிஷா, தர்ஷினி ஆகியோரின் மாமனாரும்,
பிரணவன், வைகேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ஹர்ஷினி, கிரிநாத், அஷ்மிதா, கவிநயா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
காலஞ்சென்ற ருக்மணி அம்மாள், முத்துக்குமார், ராஜாம்பாள், நடராஜ், காலஞ்சென்ற நவரட்ணம், விஜயலக்ஷ்மி, பத்மாவதி ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
காலஞ்சென்ற ஆனைக்குட்டியா பிள்ளை, சரஸ்வதி, பாஞ்சாம்பிள்ளை, பழனியாண்டி பிள்ளை, சந்திரன் (நாவலப்பிட்டி) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற பழனியாண்டிபிள்ளை, சர்மிலாஸ் (உளுகங்கை), சுப்ரமணியம் பிள்ளை, செல்லத்துரைப்பிள்ளை (புசல்லாவ ஆனந்தா ஸ்டோர்ஸ்), கல்பனாஸ், E.சுப்ரமணியம்பிள்ளை ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-08-2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணி முதல் இல- 23/2, FRANKFURT PLACE, COLOMBO-4 இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-09-2026 புதன்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.30 மணிக்கு திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
அரவிந்த்:- +94 77 233 8556
ஸ்ரீஹரன்:- +94 77 674 4488
ரவீந்திரகுமார்:- +94 77 758 4549
www.tamilthakaval.org
