Mr. Maariyappillai Periyasamypillai
Deceased: 27 October 2024
இந்தியா-திருச்சி மாவட்டம் தெற்கு சிருப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. மாரியாப்பிள்ளை பெரியசாமிப்பிள்ளை அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கு.பை.மாரியாப்பிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற வௌ்ளைச்சாமிப்பிள்ளை-செல்லம்மாள் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் மற்றும் பார்வதி ஆகியோரின் அன்புக்கணவரும்,
காந்திமதி (சென்னை), யோகானந்த் (Asian Ceramic-Colombo), சாந்தி, செந்தில்குமார் (Senicon Metal-Colombo), தங்கராஜ் (Ellora Steel -Colombo) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயச்சந்திரன் (சென்னை), நிர்மலா, கேசமூர்த்தி (Queen Tex), மணிமேகலை, கிரிஷாந்தினி ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற ஆரியமாலை, மண்ணச்ச (நல்லூர்-தமிழ்நாடு), ஆறுமுகம்பிள்ளை, கணேசன (திருச்சி) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற கந்தசாமி (இந்தியா), சிவகணேசன், கணேசன், சதாசிவம் ஆகியோரின் மாப்பிள்ளையும்,
விகாஷ், சரண்ராஜ், ஷாலினி, அருண்ராஜ், லக்ஷனா, ஷிகான் ஆகியோரின் தாத்தாவும்,
ஷரணா, நிருசா, கௌஸல்யா, பிரணவ், யாலிஷா, ஷஸ்வத், ஷிதேஷ்கர் ஆகியோரின் பாட்டாவும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம்பிள்ளை-பாப்பு அம்மாள், நடேசப்பிள்ளை-காலஞ்சென்றவர்களான பத்மாவதி, முருகையாப்பிள்ளை-சிவபாக்கியம் மற்றும் சுப்பிரமணியம்பிள்ளை- சியாலம்மை, காலஞ்சென்ற முருகையாப்பிள்ளை-புஸ்பவதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 28-10-2024 திங்கட்கிழமை காலை 7.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!
www.tamilthakaval.org
