Prof. Maheswaran Sathasivam

(Engineer)

Maheswaran Sathasivam

Date of Birth: 02 August 1954 - Deceased: 15 December 2024

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேஸ்வரன் சதாசிவம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் - நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா-இராஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

Dr. சித்ரா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ஜெயலட்சுமி, அருச்சுனா (சிரேஷ்ட பொறியிலாளர்), கஸ்தூரி (மருத்துவ மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, தமிழரசுவரன் (R P G அர்ச்சுனா), நவலட்சுமி (மதுரி) மற்றும் லோகேஸ்வரன், சத்தியவாகீஸ்வரன், திருகேதீஸ்வரன், திலகலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-12-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 - 1:00 மணி வரை Harrow Leisure Centre (Christ church Ave, Harrow, HA3 5BD) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் புகழுடல்  Hendon Crematorium (Holders Hill Road, London, NW7 1NB) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/12/2024 05:00)