திருமதி. மகேஸ்வரி கந்தசாமி
தோற்றம்: 29 ஆகஸ்ட் 1934 - மறைவு: 30 ஜூன் 2024
யாழ். புளியங்கூடல் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், 167/1, இறம்பைக்குளம், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கந்தசாமி அவர்கள் 30-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னையா கந்தசாமி (இந்துமதி ஸ்ரோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், மகாலிங்கம், தருமலிங்கம் மற்றும் நாகேஸ்வரி, வேதநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இந்துமதி, காலஞ்சென்ற நவநேசன், நவநாதன்,நவநீதன், கோமதி, சுமதி, இளமதி, நவதாசன், நவதீசன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
அருள்வேற்செல்வன், லோகேஸ்வரி, உமாதேவி, ஸ்கீலா, ஶ்ரீதரன், சிவகுருநாதன், ரவிகரன், தர்ஷினி, தீபரஜனி ஆகியோரின் பாசமிகு மாமியும்,
அனுந்திகா, ரஜீவ், நிஷாந்தா, சிவகஜன், சிவலக்ஷன், அபிரன், காண்டீபன், கௌசிகன், பிருந்தா, றொசான், கஜதீபன், செந்தூயன், நிரூஷன், கோபிநாத், நிவேதன், தர்சன், வித்தகி, விதுர்ஷன், கனிஷ்கன், ஹரிஷ், இஷா, சச்சின், சஞ்சய், ஸ்ரேயா, பாகவி, கீர்த்தன், நவதீப், நவந்திகா ஆகியோரது அன்புப் பேத்தியும்,
பிரனிதன், மன்ஷா, அனிகா, ஹஸ்வித், அர்ஜீன் ருத்ரா ஆகியோரது அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரயைகள் 03-07-2024 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைகளுக்காக பூந்தோட்டம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
