திரு. மகாதேவன் நாகேந்திரன்
தோற்றம்: 23 ஜனவரி 1941 - மறைவு: 02 நவம்பர் 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கணேஸ் லேனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. மகாதேவன் நாகேந்திரன் அவர்கள் 02-11-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகாதேவன் - நல்லாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம், லோகாம்பிகை, யோகாம்பாள், பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தியாகலிங்கம், கிருஷ்ணதாசன், சிவபாலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அருந்ததி கிருஷ்ணதாசன் அவர்களின் அன்பு மைத்துனனும்,
வைஷ்ணவி, அக்ஷரா, தனுஷாந், ஹரிசாய் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மதியழகன், சஞ்ஜீவன் ஆகியோரின் பாசமிகு மாமனும்,
டிவாசினி, நிஷார்த்திகா, கவிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-11-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இல- 88/11,கணேஸ்லேன், சிங்கபுரம், திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலிருந்து நல்லடக்கம் செய்வதற்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
