திருமதி. மகாதேவி பத்மநாதன்

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

மகாதேவி பத்மநாதன்

தோற்றம்: 24 ஏப்ரல் 1932 - மறைவு: 14 டிசம்பர் 2022

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்டரும் யூனியன் கல்லூரியின் புகழ்பூத்த, நல்வழி காட்டிய ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி மகாதேவி பத்மநாதன் அவர்கள் தனது 90 ஆவது வயதில் 14.12.2022 புதன்கிழமை அன்று இவ்வுலக வாழ்வை நீத்து சிவப்பேறு பெற்றார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா (உடுவில்) ,சின்னத்தங்கம் (கொல்லன்கலட்டி) தம்பதியரின் அன்புப் புதல்வியும்,
 
காலஞ்சென்ற நாகரத்தினம் (மாவிட்டபுரம்), தங்கமுத்து (கைதடி) தம்பதிகளின் அன்பு மருமகளும் ,
 
தெல்லிப்பழை ப.நோ.கூ.ச. முன்னாள் தலைவரும், இளைப்பாறிய இ.போ.ச. கணக்குப் பகுதி லிகிதருமான அமரர் பத்மநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
 
யூனியன் கல்லூரிப் பழைய மாணவர்களான Dr. சேந்தன் (81 O/L 84 A/L நியூசிலாந்து), ஜெயந்தி (85 O/L 88 A/L அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
கீத்தாவின் அன்பு மாமியாரும்,
 
துசியந்தனின் அன்புப் பாட்டியுமாவார்.
 
ஈமைக்கிரிகைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
தயவுசெய்து இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
 
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் யூனியன் கல்லூரிச் சமூகம் சார்பாகவும், எமது குடும்பம் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
— with Kathir Balasundaram and Sean Pathmanathan.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2022 03:17)