Mrs. Mahalakshmi Vadiveluppillai

Mahalakshmi Vadiveluppillai

Deceased: 24 June 2025

யாழ் புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நாவலர் வீதி மற்றும், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை உம்புச்சி பிளேஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாலட்சுமி வடிவேலுப்பிள்ளை அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தவேலு - கனகம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி - அன்னமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,

வடிவேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தமலர், யோகமலர், செல்வமலர், முருகானந்தன், கமலவேணி ஆகியோரின் பாசமிகு தாயும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், இராமச்சந்திரன், மகேந்திரன், காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நவநீதன், சச்சிதானந்தன், கருணாகரன், ஐனனி, ரவி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனார்தனி, பிரணவன், ஹரிஸ், ரமணா, காருண்யா, ரிஷிகேசன், அனித்தியா, கஜோரி ஆகியோரின் ஆசைமிகு பேர்த்தியும்,

லாவினின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-06-2025 திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2025 04:00)