திருமதி. மகாலெட்சுமி அம்மா சுந்தரலிங்கம்
தோற்றம்: 01 டிசம்பர் 1941 - மறைவு: 11 செப்டம்பர் 2025
யாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, சிட்னி - அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாலெட்சுமி அம்மா சுந்தரலிங்கம் அவர்கள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் - லெட்சுமி அம்மா தம்பதியினரின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி - பாக்கியச்செல்வம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகிருஷ்ணன் (அவுஸ்திரேலியா), அன்பழகன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,
நித்தியஹீ, கார்த்திகா ஆகியோரின் மாமியாரும்,
நேகா, அஷ்வதமன், சேந்தன், ஆத்விகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன், நித்தியானந்தவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தராம்பாள், இந்திராணி அம்பாள், இந்திரலிங்கம் மற்றும் ராஜலட்சுமி அம்பாள் (கனடா), ராஜலிங்கம் (இங்கிலாந்து), திலகேஸ்வரி (நியூசிலாந்து), பவானி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியகள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று காலை 9.00 - 11.30 மணி வரை Pingrove Memorial Park - North Chapel இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
