திருமதி மகாலிங்கம் விமலாதேவி
தோற்றம்: 20 ஜனவரி 1951 - மறைவு: 26 நவம்பர் 2026
யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகாலிங்கம் விமலாதேவி அவர்கள் 26.11.2026 அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களானா மருதப்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அப்புக்குட்டி மகாலிங்கம் (காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகர் (சுதா – லண்டன்), சுதர்சன் (சுதன் – கனடா), சுஜீவன் (ஜீவா – லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜிதா (விஜி), ராதிகா, சுபிதா (சுபி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேனுயா, ஹரேஷ், கிருத்திகா, ஜெசியான், லதிஷா, சுஜாஷ், வர்ஷ்னி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
மனோ (சுவிஸ்), வரதராசா (வரதன் – சுவிஸ்), காலஞ்சென்ற ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஞ்சிதமலர், விஜயா, தவம், மகேஸ்வரன், தவராசா, அருமைத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற புஷ்பமலர், இலட்சுமிதேவி, மாலா, கருணாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்:-
அன்னாரின் பூதவுடல் 28.11.2026 சனிக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இறுதிக்கிரியை மற்றும் தகனம்:-
29.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, தொடர்ந்து பிற்பகல் 02.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மகாலிங்கம்(கணவர்): +94 77 656 3278
சுதாகர்(மகன்): +44 774 054 4157
சுதர்சன்(மகன்): +1 647 308 4764
சுஜீவன் (மகன்): +44 785 236 3936
நிரோஷன் உறவினர்): +94 77 749 1002
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2026 20:34)
