திருமதி. மகாலிங்கம் பரமேஸ்வரி (குயிலா)

மகாலிங்கம் பரமேஸ்வரி (குயிலா)

மறைவு: 09 ஜூலை 2026

யாழ். நாச்சிமார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகாலிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 09-07-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல்  இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன் - பார்வதி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

து.மகாலிங்கம் (மகாமினி) அவர்களின் அன்பு மனைவியும்,

சர்மிலா (கனடா), தேவானந் (நோர்வே), பவானந் (இலங்கை), சோபானந் (M.M.Audio) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

முத்துக்குமாரு கோபாலகிருஷ்ணன் (இசைவாணர் கண்ணன்) அவர்களின் பெறாமகளும்,

பற்குணன் (ராதாமேத்தா), பரந்தாமன் (அரி), பவானி, பக்தவக்சலம் (அரன்), அருணன் (பாபு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரட்ணம் பிறேமகாந்தன் (கனடா), திருமதி தேவானந் காயத்திரி (நோர்வே), திருமதி சோபானந் விஜிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியானந் (கனடா), சூரியானந் (கனடா), வெண்பா (நோர்வே), மெலினா (நோர்வே), சோமித்ரா, மகானந் ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பவளம், விஜயரட்ணம், தையல் நாயகி, சரோஜினி தேவி மற்றும் பாலறஞ்சித் (இலண்டன்), ரஞ்சித்குமார் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் இல- 958/47, காங்கேசன்துறை வீதி, நாச்சிமார்கோயிலடியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2026 00:00)