Mrs. Mahaluxmy Arasaratnam
(ஓய்வுபெற்ற திட்டமிடல் அதிகாரி - சுகாதார திணைக்களம்)
Deceased: 07 March 2025
யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகாலட்சுமி அரசரட்ணம் அவர்கள் 07-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை - சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
Dr. அரசரட்ணம் (ஓய்வுபெற்ற பிரதி மாகாணப் பணிப்பாளர் - கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் - வடகிழக்கு மாகாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அரவிந்தன் (அவுஸ்திரேலியா - முன்னாள் முகாமையாளர் NDB வங்கி), அஜெந்தன் (கணக்காளர் - பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்மிளா (அவுஸ்திரேலியா - முன்னாள் DFCC வங்கி உத்தியோகத்தர்), அபர்ணா (வைத்தியர் - பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற நேசரத்தினம், தனலட்சுமி, காலஞ்சென்ற சண்முகநாதன் (முன்னாள் கட்டிட பட வரைஞர் கட்டிட இலாகா), செந்தில்நாதன் (ஓய்வுபெற்ற வரி மதிப்பாளர் - உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கொழும்பு), சரவணபவன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவானந்தன் (முன்னாள் ஆசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரநாதன் (இளைப்பாறிய பிரதி ஆணையாளர் - உள்நாட்டு இறைவரித் திணைக்களம்), காலஞ்சென்ற லீலாவதி, சுகிர்தமலர், காலஞ்சென்ற பேரம்பலம் (ஓய்வுபெற்ற துறைமுக அதிகாரசபை - திருகோணமலை), காலஞ்சென்ற வல்லவாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அக்ஷரா, அபிநவ, ஆதிரா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
