திரு. மகேந்திரா சண்முகராசா
தோற்றம்: 22 ஜனவரி 1955 - மறைவு: 21 மார்ச் 2026
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையைப் வசிப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட திரு. மகேந்திரா சண்முகராசா அவர்கள் 21-03-2026 சனிக்கிழமை அன்று இறைனவடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகராசா - இராசபூபதி தம்பதியினரின் அன்பு மகனும், பத்மநாதன் - திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சுகிர்தாஞ்சலி அவர்களின் அன்புக் கணவரும்,
வைஷ்ணவன், லக்ஷ்மன், தீபிகா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீரா, நிதர்சன், சோபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோகரன் சண்முகராசா அவர்களின் அன்புச் சகோதரரும்,
கீதாஞ்சலி, அரவிந்தன், அருணன், அமலன், அஜீவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆரவி, ஆதியா, ஆரவ், ஆரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 25-03-2026 புதன்கிழமை காலை 8:00 மணி முதல் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
