Mrs. Mahendrarasa Divanayaki
Date of Birth: 01 February 1944 - Deceased: 18 June 2025
யாழ். சங்கானை ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், இல - 201, பிறவுண் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மகேந்திரராசா தெய்வநாயகி அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சிலக் பரடைஸ்) - செல்லம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம் மகேஸ்வரியம்மா (சித்தங்கேணி) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரராசா (கணக்காளர் - ஓட்டோஸ் கம்பனி, யாழ்ப்பாணம், முன்னாள் முகாமையாளர் - இராஜேந்திரா ஸ்டோர்ஸ், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சயந்தரூபன் (வேலணை மத்திய கல்லூரி ஆசிரியர்), ஹேமரூபன் (பிரதம அஞ்சல் அலுவலகம், யாழ்ப்பாணம்), பிரணவரூபன் (கணக்காளர் - சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கஜலக்ஷ்மி (பிரதி அதிபர் - யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்), ஷாமிலா (உதவிக் கணக்காளர் - கொழும்பு பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநயா, அன்ஜனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்செனறவர்களான திருச்செல்வம், புனிதவதி, நடராஜா மற்றும் சிவஞானமூர்த்தி, நாகரத்தினம், சந்திரா (சீதா), குகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-06-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
