Mr. Mahesan Mathavan

(Engineer)

Mahesan Mathavan

Date of Birth: 10 February 1965 - Deceased: 15 March 2025

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வண்ணை பெருமாள் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேசன் மாதவன் அவர்கள் 15-03-2025  சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மகேசன் - விஜயதேவி (கனடா) தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தவச்செல்வம் (வேலணை) - புஸ்பகாந்தி  தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விஜிதா அவர்களின் அன்புக் கணவரும்,

றோகிற், சஞ்சய், றாகவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

Dr. ஜானகி (அமெரிக்கா), பகீரதன் (BEEFORT International School), குமுதினி (கனடா), மைதிலி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

Dr. சத்தியசீலன் (அமெரிக்கா), றவிகலா, ஸ்ரீரங்கநாதன் (கனடா), ஜெயநேசன் (கனடா), வினோதா (உப அதிபர்-யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), சிற்பரன் (Architect), செந்தூரன் (MSA3,BuildingConstructio), தயானந்த (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வியஜசுந்தரம் (பிரதம ஆசிரியர் - வலம்புரி), சுகந்தி, மயூரதி, மகிதரன் (Managing Director - Petform Groups) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-03-2025 செவ்வாய்கிழமை முற்பகல் 11:00 மணியளவில் உரும்பிராயிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் புகழுடல் உரும்பிராய் வேம்பன் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

வேம்பன் ஒழுங்கை (ஒஸ்கா லேன்),

உரும்பிராய்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


" வார்த்தைகள் இல்லை வலியைச் சொல்ல ஆறாத் துயரில் ஆழ்த்திச் சென்றாய் அவசரம் என்ன நண்பா? நீ எமை விட்டு மறைந்தாலும் மறவோம் உன் இனிய நினைவுகளை. இறையடியில் நிறைவான நிம்மதியாய் பிறப்பிறப்பில்லாப் பெரும் பதம் பெறுவாய் நண்பா. எம் பிரார்த்தனைகள் எப்போதும் உனக்காக. "
- K. Vallapananthan (Australia, 18/03/2025 18:17)
"அன்பு குன்றா வெள்ளை மனம் என்றும் அகலா சிரித்த முகம் - இனியென்று காண்போமென்று கதறியளும் மாதவனின் மனைவி, மகன்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேராதனையில் சிலகாலம் பழகியிருந்தும், என்றும் சிரமம் பாராது சிரத்தையாக வாஞ்சையுடன் வந்து நிற்கும் உன்நட்பைப் போற்றுகிறேன். மனிதரில் மாணிக்கம், மகேசனின் மாதவம், எங்கள் மாதவன்..என் கண்ணீரஞ்சலி.. சாந்தி சாந்தி சாந்தி."
- சு. நிரஞ்சன் (UK, 17/03/2025 22:06)
"சென்று வா நண்பா. நம் செல்ல கண்ணா. நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய நட்பு கடைசி வரை கடுகளவும் குறையவில்லை. உண்மை நட்புக்கு உன்னை விட உதாரணம் தேவையில்லை. நண்பர்களை சந்திக்கும் எந்த சந்தர்ப்த்தையும் நீ என்றும் தவறவிட்டதில்லை, அது நீ நட்புக்கு கொடுத்த மரியாதை. சகலரையும் சமமாக மதிக்கும் உன் மனம், அது இறைவன் கொடுத்த வரம். யாருக்கும் உதவி என்று வந்துவிட்டால் தயங்காமல் முன்னிற்பாய், அது உனது உயரிய மனித பண்பு. எந்த பிரச்சனையும் புன் முறுவலுடன் அணுகும் உனது ஆற்றல், அது நம்மையெல்லாம் வியக்க வைக்கும் விந்தை. உன் புதல்வர்கள் முன்னேற நீ நண்பர்களை நாடிய செயல்கள், உனது குடும்பம் மீதுள்ள அக்கறைக்கு சான்று. பல துறை பொறியிலளாராக பணியாற்றியது, உனது திறமைக்கு சான்று. இப்படி பல நற்குணங்கள் திறமைகள் படைத்த உன்னை இழந்தது, உனது உறவுகள் அனைத்திற்கும் பேரிழப்பே. சென்று வா நண்பா. நம் செல்ல கண்ணா. -பேராதனை பொறியிலளார் நண்பர்கள்"
- த. ரிஷீந்திரன் (, 17/03/2025 20:37)
"மாதவா!!! உன்னை என்னென்று மறப்பது. ஏற்க முடியாத ஒரு இழப்பு. அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். மனதை விட்டு அகலாத நண்பன் மாதவனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் !!!! "
- V Bavaharan (United Kingdom, 17/03/2025 16:35)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2025 22:46)