Mrs. Maheshwary Kanagaratnam
Date of Birth: 20 August 1935 - Deceased: 19 November 2025
யாழ். சிவன்பண்ணை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கனகரெத்தினம் அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு - சேதுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகரெத்தினம் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதாஸ் (ஜேர்மனி), ஜெயதாஸ் (கனடா), ஜெயவதனி (இலண்டன்), சசிவதனி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரின்பமணி, திலகரூபி, ராஜமாணிக்கம், சிவகந்தரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கோணேஸ்வரி- துரைராசா ஆகியோரின் சகோதரியும்,
மோகனராஜ்- வள்ளிநாயகி, கிரிராஜ்- வசந்தராணி, லதா- சுகேந்திரன், இந்துலதா- சிவகுமாரன், உதயராஜ்- சாந்தினி ஆகியோரின் பெரிய தாயாரும்,
பிரியங்கா, சியானுகா, அபிக்கா, ஸ்ரிபன், நவீன், பிரவீன், பஜீவன், அஞ்சனா, சாம்பவி, சாகித்தியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 24-11-2025 திங்கட்கிழமை காலை 7:00 - 8:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
