திருமதி. மகேஷ்வரி சின்னத்துரை (பரமேஸ்)

மகேஷ்வரி சின்னத்துரை (பரமேஸ்)

தோற்றம்: 07 ஜூன் 1938 - மறைவு: 12 ஜனவரி 2026

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஷ்வரி சின்னத்துரை அவர்கள் 12-01-2026 திங்கட்கிழமை தனது 87வது வயதில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புலோலியைச் சேர்ந்த திரு.திருமதி. வேலுப்பிள்ளை முதலியார் தம்பதியினரின் பாசமிகு பேரன் காலஞ்சென்ற திரு. கதிர்காமர் – ஆவரங்காலைச் சேர்ந்த காலஞ்சென்ற திருமதி. வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் பாசமிகு மகளும்,

யாழ். அத்தியடி யாழ்ப்பாணம் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வடிவம்மா தம்பதியினரின் மருகளும்,

காலஞ்சென்ற சின்னத்துரை (சிவலிங்கம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சிவராஜினி (ராஜி), சிவரஞ்சினி (ஓய்வுபெற்ற ஆசிரியை - ரஞ்சி), சிவாநந்தன் (நந்தன்), ஜெயாநந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகராஜா, கிருபாநந்தன், ராதா, டிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிமாலினி (இலண்டன்), உமாராம் (இலண்டன்), கபிலன் (கொழும்பு), அஞ்சனா (கொழும்பு), சேயோன் (பிளாரஸ்), சுவேதா (பிரான்ஸ்), கதிர் (ஜேர்மனி), ஆதவன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐநிஷா (இலண்டன்), தாரகை (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான தமிழரசு - சின்னத்துரை,  திரு. கதிர் – பாலசுந்தரம்  (ஓய்வுநிலை அதிபர் – யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை),  தர்மலிங்கம்,  இராசலிங்கம், செல்வபாக்கியம் மற்றும் பூமணி (ஆவரங்கால்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தமூர்த்தி (மூர்த்தி - இலங்கை பொலிஸ் தலைமையகம்), கனகாம்பிகை, சின்னராசு, கோவிந்தம்மா, கனகரட்ணம் மற்றும் செல்வபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-01-2026 புதன்கிழமை இல- 25/4A, Subhotharama Road, Dehiwala இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/01/2026 00:00)