Mrs. Maheshwary Sivasambu

Maheshwary Sivasambu

Date of Birth: 15 December 1930 - Deceased: 14 November 2025

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், களபூமி-காரைநகர், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சிவசம்பு அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சிற்றம்பலம் - பார்வதி தம்பதியினரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முருகேசு - பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் ஆருயிர் மனைவியும்,

Dr. சிவதேவி, சிவகுமார், சிவநாதன், சிவமலர் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

Dr. பாலசிங்கம், லோகினி, திருமகள், விசயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணிராசா - புவனேஸ்வரி, செல்லம்மா - திருநாவுக்கரசு, சிவகாமசுந்தரி - அம்பலவாணர், சிவபாதசுந்தரம் - மீனாட்சி, தங்கம்மா - கணபதிப்பிள்ளை, மனோன்மணி - பாலசுப்பிரமணியம், சின்னத்துரை - சிவபாக்கியம், பொன்னம்மா - பரமசாமி, காசிப்பிள்ளை - புவனேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

Dr. சதீஸ்குமார் - லேனா, Dr. சங்கீதா, லேகா - சஞ்சய், மித்ரா - குணால், Dr. மேனகா - சிவதாஸ், கவிதா, காவிரி, சங்கரி, சங்கரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஏய்னா, டிலன், அக்ஷா, ஆரியன், கார்த்திக், ஓவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 18-11-2025 செவ்வாய்க்கிழமை காலை 9:00 - 10:00 மணி வரையும் St. John’s Dixie (737, Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/11/2025 00:00)