Mrs. Maheshwary Thiyagarasa
Date of Birth: 14 August 1954 - Deceased: 02 September 2026
யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், இராமகிருஸ்ணா வீதி, கோண்டாவில் கிழக்கினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. மகேஸ்வரி தியாகராசா அவர்கள் 02-09-2026 புதன்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - சிவகொழுந்து தம்பதியினArialரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சங்கரப்பிள்ளை, விசாலாட்சி, லட்சுமணன், சுந்தரலிங்கம், சிவசுப்பிரமணியம், சரோஜினிதேவி மற்றும் அருளம்பலம், தேவராசா, இலண்டனில் வசிப்பவர்களான தங்கபுஸ்பம், ஜெயக்குமார், சந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவாந்தினி, கருணாநந்தன் (ஆனந்தன் வெற்றிலை கடை, திருநெல்வேலி சந்தை), சிவலோகன் (ஸ்ரீ கிருஸ்ணா களஞ்சியம், திருநெல்வேலி சந்தை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஸ்பராசா (பல்பொருள் வாணிபம், திருநெல்வேலி சந்தை), அனுஷா, தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கவிதா, வினோஜன், பிரசாந்தன், பிரசாலினி, மதுசன், தினேசன், நிலாஜினி, ராஜினி, சிவதீபிகா, வர்சினி ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோண்டாவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கருணாநந்தன்: +94 77 584 7626
சிவலோகன்: +94 77 175 6236
www.tamilthakaval.org
