யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் சரசாலை, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகேஸ்வரன் மதீதரன் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மகேஸ்வரன் (Jaffna Electricals) - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் - வனிதா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிவதாரணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அட்சயன், அஸ்வித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மதிசன், யசோதினி (அமெரிக்கா), சாமினி (பிரித்தானியா), முகுந்தன் (Jaffna Electricals) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
குமுதினி (இந்தியா), வித்தியாசங்கர் (அமெரிக்கா), நிசாந்தன் (பிரித்தானியா), வேதகி (கொழும்பு), தர்மினி (பிரித்தானியா), சிவகாமி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபூர்வன் (பிரித்தானியா), ஆதித்தியா, அபிநயன், ஆதவி (இந்தியா) ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
அபிராம், ஆதன்யா (கொழும்பு) ஆகியோரின் பெரிய தந்தையும்,
சௌமியா, துளசிந்தன் (அமெரிக்கா), அயிறா, நிலன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

