Mrs. Maheswari Balachandran

(ஓய்வுபெற்ற ஆசிரியை)

Maheswari Balachandran

Date of Birth: 18 March 1936 - Deceased: 11 June 2025

யாழ். காரைநகர் வேதாரடைப்பைப் பிறப்பிடமாகவும், இல - 20,2/1, உருத்திரா மாவத்தை, வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்கள் 11-06-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சிவாகாமிப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும், 

காலஞ்சென்ற பாலச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி - மதியாபரணம், பாலசிங்கம், ராஜசிங்கம், துரைசிங்கம், குலசிங்கம் (வீரவாகு), இரத்தினசிங்கம் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,

சற்சொரூபவதி, யோகேஸ்வரன், இந்திரா, மோகனா, கனகநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுபமுரளிதரன், வானதி, நடேஸ்வரன், மகேஸ்வரன், ஆதிசிவம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துவாகரன் - ஜெனனி, அபிராம், ஆரணி, ஆரதி, திவ்யா, மாதவன், மயூரன், மேதா, மாயோன், ஹரீஷ்மா, ரேஷ்மா, அருண்சிவம் ஆகியோரின் அன்புப் பேத்தியும், 

விஷ்ணுவின் ஆருயிர்ப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/06/2025 04:00)