திருமதி. மகேஸ்வரி கருணைராஜா

மகேஸ்வரி கருணைராஜா

தோற்றம்: 15 அக்டோபர் 1950 - மறைவு: 04 பெப்ரவரி 2026

"கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது"

சங்கீதம் 116:15

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு - வாழைச்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி கருணைராஜா அவர்கள் 04-02-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி - தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மார்கண்டு - அருளம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கருணைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராசா, காலஞ்சென்றவர்களான அகிலாண்டேஸ்வரி, நவரெட்ணராஜா, நீலாம்பாள், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செயபால், சதாசிவம், சிவலெட்சுமி, தனலெட்சுமி, காலஞ்சென்றவர்களான கருணரெட்ணம், கருணைக்கிருபை, நவரெட்ணம், கோணநாயகம், தவராசா, சேதிராசா, சாந்தினி, புலேந்திரராசா ஆகியோரின் மைத்துனியும்,

தேவதர்சினி, மோகன்ராஜ் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

வரதராஜன், லக்சி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிலாசன், அபிலாசினி, சுகந்தி, அபிஷயினி, அலெக்ஷன் ஆகியோரின் அம்மம்வும், 

ஆகாஷ், அஸ்வின், ரியானா ஆகியோரின் அப்பம்மாவும்,

கைலு, அருவி ஆகியோரின் ஆசைப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, சரீரம் வாழைச்சேனை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/02/2026 00:00)