Mrs. Maheswary Ponnuthurai
Date of Birth: 02 July 1927 - Deceased: 10 September 2024
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், Toronto-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை-கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி-ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை (ஓய்வுபெற்ற அதிபர்-மானிப்பாய் மெமோறியல் ஆங்கில பாடசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராஜேந்திரம், தெய்வேந்திரம், புனிதமணி, சத்தியபாலா, புலவர் அரியநாயகம், அருந்ததி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
மீரா (ஓய்வுபெற்ற பிரதி திட்டமிடல் பணிப்பாளர்-வேலணை பிரதேச செயலகம்), சுபித்தா (கனடா), சித்திரா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
திசநாயகம்பிள்ளை (ஓய்வுபெற்ற சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்-தீவக வலயம்), பரமதாசன் (கணக்காளர்-கனடா), சிவா தம்பிப்பிள்ளை (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிருஸ்னி (கணக்காளர்-கனடா), நிஷாந்தன் (வீடு விற்பனை முகவர்-கனடா), மைக்கேல் (கொள்கை ஆலோசகர்-கனடா), சுகாஷா (வழக்கறிஞர்-கனடா), பவித்திரா (வைத்தியர்-கிளிநொச்சி), சுகந்தன் (பொறியியலாளர்), தர்மிகா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்-கிளிநொச்சி தெற்கு), மோகனராஜ் (பொறியிலாளர்-சிங்கப்பூர்), சரண்யா (வைத்தியர்-சுவிஸ்), பிரணவன் (வைத்தியர்-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஓவியா (கனடா), அர்ச்சுன் (கனடா), ஆதவன் (கனடா), ஆதிரா, ஆத்விகா, ஆருசன், ஆகீசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 16-09-2024 திங்கட்கிழமை முற்பகல் 10.30-1.30 மணி வரையும் பார்வைக்காக Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் வைக்கப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
