திருமதி. மகேஸ்வரி சண்முகம்

மகேஸ்வரி சண்முகம்

தோற்றம்: 29 நவம்பர் 1944 - மறைவு: 28 நவம்பர் 2024

யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி-வட்டக்கச்சி இல-85, கட்சன் வீதியை வசிப்பிடமாகவும் தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி சண்முகம் அவர்கள் 29-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பு-சின்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கமலம், நடராசா, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகநேசன் (நேசன்), புஷ்பராணி (கலா), மனோராணி (மதி), உதயராணி (உதயா), பாலகௌரி (கௌரி), நகுலேசன் (நகுலன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மாலினி, கிருபானந்தன் (ஆனந்தன்), கருணாகரன் (கரன்), லோகஜோதி (சோதி), தர்மிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்தை, விசுவநாதர், விசாலாட்சி, வள்ளியம்மை, நாகநாதன், இளையதம்பி, ஆறுமுகம், பழனி, வேலாயுதம், தில்லையம்மா மற்றும் சறோஜினிதேவி (யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனியும்,

சதுஜன், யதிசாந், சாருஜா, அனுசாந்-பானுஷா, அனோஜிகா, தனுசாந், கபிசாந், தேனுஷா, யதுர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கைலாஸ் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை (Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France)  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-12-2024 திங்கட்கிழமை காலை 8:30 மணி முதல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2024 05:00)