திரு. மகேஸ்வரி விக்கினேஸ்வரன்
(ஆசிரியை)
தோற்றம்: 06 ஏப்ரல் 1934 - மறைவு: 26 டிசம்பர் 2024
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி விக்கினேஸ்வரன் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுருநாதன் - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,
உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற ஆறுமுகம் விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாபரன் (கனடா), கிருபாகரன் (டென்மார்க்), சுதர்ஷினி (உரும்பிராய்) ஆகியோரின் பாசமிகு அன்னையும்,
பத்மசிறி, கெளசிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அச்சலா, சுரேகா, கிருபா, ஜெகன், ஜெஷினா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற பத்மாவதி, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி, மகாதேவன், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள், ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
