(Sunday 05-05-2024 at 09:30 AM Sri Lanka time)
திருமதி மகேஸ்வரிபிள்ளை சண்முகலிங்கம்
Mrs. Maheswarypillai Shanmugalinagm
தோற்றம்: 18 ஜூன் 1938 -
மறைவு: 03 மே 2024
Date of Birth: 18 June 1938 -
Deceased: 03 May 2024
யாழ். கச்சாய் வீதி, கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், அல்லாரையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகலிங்கம் மகேஸ்வரிப்பிள்ளை (இராசமணி) அவர்கள் 04-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமர்- முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை- கற்பகப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் (பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் காசாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், தங்கம்மா, ராசம்மா மற்றும் இராசையா, நல்லம்மா, யோகராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராகுலன் (கனடா), அகிலன் (கனடா), காலஞ்சென்ற அரவிந்தன் (லண்டன்) மற்றும் சண்சுதர்ஷன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நந்தினி (கனடா), ஆனந்தி (கனடா), சசி (லண்டன்), வாணி (அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
துவாரகன், நிருஜன், பிரவீன், பிரியங்கா, வார்சிகன், யதுர்ஷிகன், கபிஷன், அனுஷன், சந்தியா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று புகழுடல் தகனக் கிரியைகளுக்காக எறியால்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with deep sorrow that we announce the passing of Maheswarypillai Shanmugalinagm on the 3rd May 2024,
Wife of late Kanagasabai Shanmugalingam,
Mother to Rakulan (Canada), Ahilan (Canada) and Sutharsan (Australia), mother to the late Aravinthan (UK),
Mother-in-law to Nandhini, Ananthi, Sasi and Vani,
Grandmother to Thuvharagan, Niruyan, Praveen, Prijanga, Kabisan, Anusan, Santhiya, Varshegan, Yathurshikan.
May her soul rest in peace.
We request our relatives, friends and families to accept this notice
Informed By: The Family
www.tamilthakaval.org