Mr. Mahindan Kanagarathinam
Date of Birth: 11 December 1965 - Deceased: 08 December 2024
யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மகிந்தன் கனகரத்தினம் அவர்கள் 08-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரத்தினம்-தங்கலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், தம்பு கந்தையா-நாகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கலாமதி அவர்களின் பாசமிகு கணவரும்,
கிரிஷாந்த், மாதூரி (வாசுகி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
ஹரிதா, ஷர்வின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இஷாந்த் சிவனின் அன்பு பேரனும்,
துஷ்யந்தன் (பாலா), ஜெயானந்தன் (ஜெயா), கிரியா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற ஜெயகுமாரன்-நவகுமாரி, கமலாதேவி-லட்சுமணன், அருள்நேசர்-சௌதாமணி, முருகானந்தன் (ஆனந்தன்)-வசந்தராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவாஜினி, மிதுன், விதுஷன், கஜந்தன், ஜூட், டேமியன், ஜெய்சன், கஜன், ஜகீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிவாஷிகா, மெலானி, விசால், லோகினி, லக்ஷன், அபிசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற அகிலனின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் வியாழக்கிழமை அன்று நெதர்லாந்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
