Mrs. Maiyeswary Peraman

(முன்னாள் ஆசிரியை - உடபுசல்லாவ கோடன் தமிழ் வித்தியாலயம்)

Maiyeswary Peraman

Date of Birth: 28 November 1944 - Deceased: 06 August 2025

மாத்தளை - மந்தாண்டவளை, சோமசுந்தரம் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. மெய்யேஸ்வரி பெரமன் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பெரமன் தேவர் (முன்னாள் அதிபர் - உடபுசல்லாவ கோடன் தமிழ் வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. மணிவண்ணன், செந்தூரன் (பொது சுகாதார பரிசோதகர்), மலர்விழி (ஆசிரியை), வளர்மதி (ஆசிரியை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

Dr. வைதேகி, சசிராகிணி (முகாமைத்துவ அலுவலகர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2025 சனிக்கிழமை காலை வரை அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் உடலம் மாத்தாளை மாநகரசபை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/08/2025 04:00)