Mrs. Malarvilithevi Thirunavukarasu
(முன்னாள் மேற்பார்வையாளர் - யாழ்ப்பாணம், தமிழ் ஆசிரியர்-கனடா)
Date of Birth: 07 February 1966 - Deceased: 28 October 2024
யாழ். புலோலி தெற்கு சின்னத்தாய் ஶ்ரீபுரபதியைப் பிறப்பிடமாகவும், Marhkam-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மலர்விழிதேவி திருநாவுக்கரசு அவர்கள் 28-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வத்துரை-ராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பாலசுந்தரம்-அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
ஆரணி, மதுரணி ஆகியோரின் அன்பு தாயாரும்,
காலஞ்சென்ற சூரியகுமாரன், கௌசலாதேவி, மகேந்திரகுமார் (காணாமல் ஆக்கப்பட்டவர்), ஶ்ரீகேந்திரதேவி (கனடா), சிவேந்திரகுமார் (கனடா), ஶ்ரீமுகுந்தகுமாரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரன், கண்ணதாசன், தாட்சாயினி, ஜீவமோகன், ராணி (கனடா), சீவரத்னம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகிழினி, மயூரி, ஶ்ரீதரன், பிரணவன், மதுவாகினி, கலாபன், கலாபனா, சரண், லாவண்யா, சோபிகா ஆகியோரின் பெரியம்மாவும்,
அக்சயன், கியானா, தமயந்தி, தாமிரா, துபிசன், கோபிகா, சுபிசன், பிரியதர்ஷினி ஆகியோரின் அத்தையும்,
காண்டீபன், ஜதுநந்தா ஆகியோரின் அன்பு மாமியும்,
மிதுஷின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-11-2024 சனிக்கிழமை அன்று மாலை 5.00-9.00 மணி வரையும், 03-11-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00-9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 11.00 மணி இறுதிக்கிரியைகள் நடைபெற்று, 11.30 மணியளவில் Highland Hills Funeral Home & Cemetery (12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
